அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோவில் நிலத்திற்கு பட்டா வழங்க

Added : செப் 04, 2021
Share
Advertisement
மார்க்சிஸ்ட் கம்யூ., - சின்னதுரை: தமிழக தொழிலாளர்கள் போராடியதால், தொழிலாளர் நலனுக்காக, 44 வகையான தொழில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மத்திய அரசு இவற்றை மாற்றி, நான்கு தொகுப்புகளாக சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை தொழிலாளர் நலனை பாதிக்கும். ஒவ்வொரு சட்ட தொகுப்பிற்கும், மாநில அரசு சார்பில் விதிகள் உருவாக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்சங்க பிரதிநிதிகள்,

மார்க்சிஸ்ட் கம்யூ., - சின்னதுரை:

தமிழக தொழிலாளர்கள் போராடியதால், தொழிலாளர் நலனுக்காக, 44 வகையான தொழில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மத்திய அரசு இவற்றை மாற்றி, நான்கு தொகுப்புகளாக சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை தொழிலாளர் நலனை பாதிக்கும். ஒவ்வொரு சட்ட தொகுப்பிற்கும், மாநில அரசு சார்பில் விதிகள் உருவாக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், வல்லுனர்கள் கருத்தை கேட்டறிந்து சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை திரும்பப் பெறும்படி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் குறைந்தபட்ச கூலி சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாதம், 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கச் செய்ய வேண்டும்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அளவில், அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும். தோட்ட தொழிலாளர்கள் சட்டம், 1951ல் கொண்டு வரப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உருவாக்க வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2017ல் இருந்து 2020 வரை, தங்கள் பதிவை புதுப்பிக்காமல் விடுபட்டவர்கள் புதுப்பிக்க, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை மாற்றி, 2010ல் இருந்து புதுப்பிக்க தவறியவர்களுக்கும், புதுப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அமைச்சர் கணேசன்:

ஏற்கனவே முதல்வர், 2017ல் இருந்து பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். மீண்டும், 2010ல் இருந்து புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பார்.

சின்னதுரை:

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் பணியை வரன் முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இலவசமாக பட்டா வழங்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது குறித்து, சர்ச்சையான விவாதம் நடக்கிறது. ஏழை, எளியோர் நலனுக்காக பாடுபடுபவர் முதல்வர். கடந்த 2008ல் கருணாநிதி, கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வரன்முறைப்படுத்தி, கோவில் வாடகைதாரர்களாக ஏற்று, வாடகை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டார்.

கடந்த, 2019ல், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, பட்டா வழங்க அரசாணை வெளியிட்டனர். அதை எதிர்த்து மூன்று பேர் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் பட்டா வழங்க தடை விதித்தது. தடை ரத்து செய்யப்பட்ட பின், இப்பணியை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.

கோவில் நிலங்கள் அந்த காலத்தில், அரசர்கள், ஜமீன்தாரர்கள், தொழில் அதிபர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை. அதில் கிடைக்கும் வருமானத்தில் கோவில் பணி செய்யப்படுகிறது.அவர்கள் இனாமாக கொடுத்த நிலத்திற்கு எடுத்தேன், கவிழ்த்தேன் என, பட்டா வழங்க முடியாது. இது தொடர்பாக, முதல்வர் ஆழ்ந்து பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பார்.

அ.தி.மு.க., - வேலுமணி:

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க, 2019ல் அரசாணை வெளியிடப்பட்டது.அரசு நிலங்களுக்குரிய பணத்தை வழங்கி நிலத்தை பெற்று, ஏழைகளுக்கு வழங்க முடிவானது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்து, ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:

2019ல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்பின் ஆட்சியில் இருந்தவர்கள், தடைஆணையை நீக்க முயற்சிக்கவில்லை.சமீபத்தில், நீதிபதி மகாதேவன் அடங்கிய பெஞ்ச், கோவில் நிலங்களை வாடகைக்கு விடக்கூடாது; விற்கக்கூடாது என தீர்ப்பளித்தது.இரண்டு வழக்கிலும், சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி முதல்வர் கூறி உள்ளார். நீங்கள் விட்டுச்சென்ற பணிகளையும், முதல்வர் செய்வார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X