இந்தியாவின் கோரிக்கை: தலிபான் வரவேற்பு

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை தலிபான் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன்
 இந்தியாவின் கோரிக்கை: தலிபான் வரவேற்பு

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை தலிபான் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன் உள்ளிட்டோருடன் பேசினார். இதைத் தொடர்ந்து ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய துாதர் தீபக் மிட்டல், தலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானக்ஸ் உடன் பேச்சு நடத்தினார்.


latest tamil news




அப்போது 'இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிரான பயங்கரவாaத நடவடிக்கைகளுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது' என, தீபக் மிட்டல் தெரிவித்தார். மேலும் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது இந்தியாவின் கவலையில் உள்ள நியாயம் கவனத்தில் கொள்ளப்படும் என ஷெர் முகமது தெரிவித்தார். அதனால் ஆப்கனில் தலிபான் என்ன செய்கிறது என்பதை விட, அங்கு பாக்., என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்தியா தலைமையில் நடந்து முடிந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 'பாக்.,கில் செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் இடமளிக்கக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலிபானும், 'பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டோம்' என, அமெரிக்காவுக்கு உறுதி அளித்து உள்ளது. அதன்படி தலிபான் அமைப்பினர் நடந்து கொள்கின்றனரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



இரு தரப்பு பேச்சு



இந்திய - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள், ராணுவத் துறை அமைச்சர்கள் நவம்பரில் வாஷிங்டனில் சந்தித்து பேச உள்ளனர். இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கா சார்பில் அன்டோனி பிளின்கன், லாயிட் ஆஸ்டின் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
11-செப்-202104:26:19 IST Report Abuse
NicoleThomson அவங்க எப்போது சொல்வதை செய்துள்ளனர் , அன்றைய துருக்கி மன்னர்களின் காலத்தில் இருந்து இன்றைய ஊடகத்துறை மறைமுக முன்களப்ஸ் மன்னர்கள் வரை முதுகில் குத்துவது அவர்களுக்கு சந்தோஷம்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-செப்-202119:48:07 IST Report Abuse
N Annamalai அவர்கள் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றினால் நமக்கு நலம் .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
05-செப்-202112:50:38 IST Report Abuse
Rasheel மூர்க்க கூட்டத்தை நம்பினால் முழுகி போக வேண்டியதான். அவனுக பெண்டாட்டி சகோதரியயே பிள்ளை பெரும் இயந்திரமாக நடத்துகிறான். அப்புறம் நாம் எம்மாத்திரம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X