அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க அவகாசம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில், தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த பின், அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்:* தமிழக திறன் மேம்பாட்டு கழகம், தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான, ரோபோடிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, கைபேசி செயலி உருவாக்கம், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் திறன் பயிற்சிகளை வழங்கும்* வேலைவாய்ப்பு அலுவலகங்களில்

சென்னை:சட்டசபையில், தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த பின், அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழக திறன் மேம்பாட்டு கழகம், தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான, ரோபோடிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, கைபேசி செயலி உருவாக்கம், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் திறன் பயிற்சிகளை வழங்கும்

* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய, 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.அத்துடன், 2017, 2018, 2019ல், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, ஏற்கனவே அரசு பொறுப்பேற்ற பின், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, புதுப்பித்தல் சலுகை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்

* தமிழக சமையல் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது, தமிழக சமையல் மற்றும் உணவக தொழிலாளர்கள் நல வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக, உணவக தொழிலில் ஈடுபட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்

* கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தோரின் குழந்தைகள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதனால், 10 ஆயிரம் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவர்

* தமிழக அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 85 ஆயிரம் ஆட்டோ, கார், வேன், டெம்போ, லாரி. பஸ் மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின் நலன்; இதர வாகன ஓட்டுனர்களின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதலுதவி பெட்டி, சீருடை, ஷூ அடங்கிய தலா 1,500 ரூபாயில் பாதுகாப்பு பெட்டகம், 12.75 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X