பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் ;நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் நகர பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:திண்டிவனம் நகர எல்லைக்குப்பட்ட ரோஷணை, கிடங்கல், காவேரிப்பாக்கம், அவரப்பாக்கம், திண்டிவனம் பகுதிகளில் புதிதாக நகராட்சி குடியிருப்பு, வணிக உபயோக கட்டடங்கள் சட்டத்திற்கு முரணாக கட்டப்பட்டு

திண்டிவனம்-திண்டிவனம் நகர பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:திண்டிவனம் நகர எல்லைக்குப்பட்ட ரோஷணை, கிடங்கல், காவேரிப்பாக்கம், அவரப்பாக்கம், திண்டிவனம் பகுதிகளில் புதிதாக நகராட்சி குடியிருப்பு, வணிக உபயோக கட்டடங்கள் சட்டத்திற்கு முரணாக கட்டப்பட்டு வருகிறது.தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின் அரசாணைப்படி நகர எல்லைக்குப்பட்ட பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்ட பின்னரே, கட்டட வேலை துவங்க வேண்டும்.அவ்வாறு அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு, சொத்துவரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவை இனி வரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது.மேலும், இதுபோன்று அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X