இந்தியா

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கில்லை : ஆணையம் மனு

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (3+ 9)
Share
Advertisement
சென்னை ;தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. ஆறு மாதம் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கும், நாளை ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என
ஊரக உள்ளாட்சித் தேர்தல், சுப்ரீம் கோர்ட், ஆணையம் மனு

சென்னை ;தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. ஆறு மாதம் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கும், நாளை ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு, 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், தேர்தல் நடக்கவில்லை; மற்ற மாவட்டங்களிலும் நகர்ப்புற தேர்தலை நடத்த, அ.தி.மு.க., அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால், தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டு வந்தது.
இதற்காக, உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.


வாக்காளர் பட்டியல்



இதற்கிடையே, 'செப்., 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, ஜூன் 22ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி ஆகியோர் கவனம் செலுத்தி வந்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களில், அதிகாரி களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஓட்டுப்பதிவு நேரத்தை, ஒரு மணி நேரம் கூடுதலாக அறிவித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேர்தலை நடத்த, தி.மு.க., அரசு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைத்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பிரச்னையை கையில் எடுத்து, அ.தி.மு.க., அரசியல் செய்தது; சாலை மறியலில் ஈடுபட்டது.
பல்கலைகள் இணைப்பால், தேர்தல் நடக்கவுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு எதிரான மன நிலைக்கு மக்கள், மாணவர்கள் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தி.மு.க., தேர்தலை தள்ளிப் போட விரும்புவதாக தெரிகிறது.


காலக்கெடு



உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு 15ம் தேதியுடன் முடிகிறது. அதனால், தேர்தலை நடத்த மேலும் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை மாநில தேர்தல் ஆணையம் அணுகியுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், இப்போது தேர்தலை நடத்தும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இல்லை என தெரிகிறது. ஒருவேளை, நீதிமன்றத்தில் உரிய அனுமதி கிடைக்காதபட்சத்தில், தேர்தலை நடத்து வதற்கான ஏற்பாடுகளையும் ஆணையம் செய்து வருகிறது.இதற்காக, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதில், கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துகளை, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்குமா என்பதற்கான முடிவு, உச்ச நீதிமன்றம் கையில் தான் உள்ளது.


15ம் தேதிக்குள் முடிவு!



நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அளித்த பேட்டி:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.ஆறு மாநகராட்சி, 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டதால், அங்கு வார்டு வரையறை செய்ய வேண்டி உள்ளது. இதற்கு, 130 நாட்கள் அவகாசம் தேவை. அனைத்து பகுதி உள்ளாட்சி தேர்தலையும், விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பதில், தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-செப்-202110:34:11 IST Report Abuse
duruvasar இந்த கோரிக்கையை வைக்கும் இவர்களின் மன உளைச்சலுக்கு மதிப்பளியுங்க.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-செப்-202110:23:13 IST Report Abuse
sankaseshan Ivanunga தான் Admk உள்ளாட்சி தேர்தல் நடத்த வில்லை என்று குற்றம் சொன்னானுங்க இப்ப சாதியை கரணம் காட்டுறானுங்க , அப்படி நடந்தாலும் உருட்டல் மிரட்டல் பண்ணி பொது மக்களை ஒட்டு போட விட மாட்டாங்க , கள்ள ஒட்டு போட்டு ஜெயிப்பாங்க திருட்டு கும்பல்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
05-செப்-202102:21:13 IST Report Abuse
BASKAR TETCHANA அது வேறொன்றும் இல்லை. ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் கண்டிப்பாக மண்ணை கவ்விடுவோம் என்று தெரிந்து தான் தேர்தல் ஆணையத்தை மிரட்டி எதோ காரணம் சொல்கின்றனர். உண்மையான காரணம் இது தான். ஸ்டாலினுக்கு உண்மையிலே தேர்தலை கண்டு பயம் இல்லை என்றால் இந்த தேர்தலை நேர்மையாக நடத்தி காட்ட சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X