தந்தை, அண்ணனை வெட்டியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, அண்ணனை வெட்டியவர் கைது

Added : செப் 04, 2021
Share
அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.அவலுார்பேட்டை அடுத்த மேட்டுவைலாமூர், ஆலப்பட்டறைதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 70; இவரது மகன்கள் தரணிதரன், 38; தமிழ்ச்செல்வன், 32; நிலம் பாகம் பிரித்ததில் தந்தை மற்றும் அண்ணன் மீதும் தமிழ்ச்செல்வன் கோபத்தில்

அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.அவலுார்பேட்டை அடுத்த மேட்டுவைலாமூர், ஆலப்பட்டறைதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 70; இவரது மகன்கள் தரணிதரன், 38; தமிழ்ச்செல்வன், 32; நிலம் பாகம் பிரித்ததில் தந்தை மற்றும் அண்ணன் மீதும் தமிழ்ச்செல்வன் கோபத்தில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு தரணிதரன் வீட்டு வாசலில் அமர்ந்து புகழேந்தி பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு சென்ற தமிழ்ச்செல்வன், நிலம் பாகம் பிரித்தது குறித்து தந்தை புகழேந்தியிடம் கேட்டு தகராறு செய்து, கத்தியால் வெட்டினார். தடுத்த அண்ணன் தரணிதரனையும் கையில் வெட்டினார். காயமடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X