மம்தா தொகுதிக்கு செப்., 30ல் இடைத்தேர்தல் அறிவிப்பு

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (11+ 8)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பவானிபுர் உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு செப்., 30ல் இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.சவால்மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்து உள்ளது. மார்ச் - ஏப்., மாதங்களில் நடந்த சட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள்
மம்தா தொகுதி, செப்., 30, இடைத்தேர்தல் அறிவிப்பு

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பவானிபுர் உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு செப்., 30ல் இடைத் தேர்தல் நடத்தப்
படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


சவால்



மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்து உள்ளது. மார்ச் - ஏப்., மாதங்களில் நடந்த சட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள் திரிணமுல் காங்., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. திரிணமுல் காங்.,கில் இருந்து பா.ஜ.,வுக்கு மாறிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும்படி, மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார்.வழக்கமாக பவானிபுர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சுவேந்து அதிகாரியிடம் தோல்விஅடைந்தார்.

இருப்பினும் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். சட்ட விதிகளின்படி ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.இதற்கிடையே பவானிபுர் தொகுதியில் வென்ற சோபன்தேப் சட்டோபாத்யாய், தன் பதவியை மம்தாவுக்காக ராஜினாமா செய்தார். மாநில விவசாய அமைச்சராக உள்ள அவரும், நவ.,க்குள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.அவர் கர்தாக் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.




இடைத்தேர்தல்



இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகள் மற்றும் ஒடிசாவில் ஒரு தொகுதிக்கான இடைத் தேர்தலை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. வரும் 30ல் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. அக்., 3ல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் பல மாநிலங்களில் காலியாக உள்ள 31 சட்டசபை தொகுதிகள் மற்றும் மூன்று லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேற்கு வங்கத்தில் பவானிபுர் தவிர, சம்சேர்கஞ்ச், ஜங்கிபுரி மற்றும் ஒடிசாவின் பிப்லி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது.


வழிகாட்டு நெறிமுறை



மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், இடைத்தேர்தல் நடக்க உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் சேர்ந்து பேரணியாக வர தடை விதிக்கப்படுகிறது.பிரசாரம் மேற்கொள்ளும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். பொதுக்கூட்டங்களில் 1,000 பேருக்கும் மேல் பங்கேற்கக்கூடாது.சாலையில் பைக், சைக்கிள் உள்ளிட்டவற்றில் பேரணியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் வேட்பாளர், தன்னுடன் நான்கு பேரை மட்டுமே உடன் அழைத்துச் செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
05-செப்-202119:43:12 IST Report Abuse
DVRR ஒர்ஸ்ட் பெங்காலில் முஸ்லிம்கள் 31,144,763 மொத்த ஜனத்தொகை 103,815,877 2021 ல் 30% முஸ்லிம்கள் அப்போ நிச்சயம் முஸ்லீம் மும்தாஜை தான் ஜெயிக்கவைப்பார்கள்
Rate this:
sankar - Nellai,இந்தியா
05-செப்-202122:17:33 IST Report Abuse
sankarஅப்ப எழுவது சதவீதம் மாற்றி விழும் - ததிங்கிணத்தோம் என்று சொல்ல வரீங்க...
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
05-செப்-202114:35:44 IST Report Abuse
E. RAJAVELU எதிரிகளை பந்தாடுவதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், சிவசேனா தொண்டர்கள் மிக சிறப்பானவர்கள். இவர்களை போல் மற்றவர்களும் செயல்பட்டால் பிஜேபியை வீழ்த்திவிடலாம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
05-செப்-202122:18:33 IST Report Abuse
sankarதாலிபான்கள் என்று சொல்லுங்கள் -...
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
05-செப்-202114:32:36 IST Report Abuse
E. RAJAVELU திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா தொண்டரகளைப்போல் காங்கிரஸ் தொண்டரகளும் வீரமுடன், செயல் பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X