பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூருக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகை: கரூரில் 65 மி.மீ., மழை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. மேலும், கரூரில் அதிகபட்சமாக, 65 மி.மீ., மழை பெய்தது.டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12 முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு, 3,000 கன அடியிலிருந்து அதிகபட்சமாக, 15 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டது. அப்போது அதிகபட்சமாக, 14 ஆயிரத்து, 500 கன அடி வரை மாயனூர்

கரூர்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. மேலும், கரூரில் அதிகபட்சமாக, 65 மி.மீ., மழை பெய்தது.


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12 முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு, 3,000 கன அடியிலிருந்து அதிகபட்சமாக, 15 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டது. அப்போது அதிகபட்சமாக, 14 ஆயிரத்து, 500 கன அடி வரை மாயனூர் கதவணைக்கு வந்தது. பிறகு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், 5,000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் வந்தது. இந்நிலையில் பவானி சாகர் அணை அமராவதி அணைகளில் இருந்து, உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 15 ஆயிரத்து, 646 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 16 ஆயிரத்து, 289 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், 15 ஆயிரத்து, 169 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட மூன்று பாசன வாய்க்கால்களில், 1,120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கதவணை பகுதியில், 30 மி.மீ., மழை பெய்தது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 550 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 559 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், 200 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில், 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் நேற்று காலை, 88.06 அடியாக இருந்தது. அணை பகுதியில் நேற்று காலை, 6:00 மணி வரை, 2 மி.மீ., மழை பெய்தது.

மழை நிலவரம் (மி.மீ.,): கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக கரூர், 65, அரவக்குறிச்சி, 10, அணைப்பாளையம், 37, க.பரமத்தி, 51, குளித்தலை, 9, தோகைமலை, 10, கிருஷ்ணராயபுரம், 27, மாயனூர், 30, பஞ்சப்பட்டி, 28.2, கடவூர், 16, பாலவிடுதி, 13.2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 25.45 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X