சம்பா சாகுபடிக்காக உழவுப் பணிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா சாகுபடிக்காக உழவுப் பணிகள் துவக்கம்

Added : செப் 04, 2021
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக நெல் நாற்று விடும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. தொடர்ந்து சம்பா சாகுபடி துவங்க உள்ளது. இதனால், விவசாயிகள் தழைச் சத்துக்காக நிலத்தில் அவுரி

கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக நெல் நாற்று விடும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. தொடர்ந்து சம்பா சாகுபடி துவங்க உள்ளது. இதனால், விவசாயிகள் தழைச் சத்துக்காக நிலத்தில் அவுரி செடியை பயிரிட்டுள்ளனர். அதேபோல், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை நிரம்பும் நிலையில் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சோளம் அறுவடை நிறைவு பெற்றுள்ளது. இதனால், நெல் சாகுபடி பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக நெல் நாற்று விடும் பணி தொடங்கியுள்ளது.

இதகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா சாகுபடிக்காக வரும் ஜனவரி இறுதி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அமராவதி அணையிலிருந்து, குடிநீர் தேவைக்காக ஜூன், 20 முதல் ஜூலை, 5 வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப் பாசன பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டார பகுதிகளில் சோளம் அறுவடை முடிந்துள்ளது. அமராவதி அணையின் நீர் மட்டம் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் நடப்பாண்டு நெல் சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், சோளம் அறுவடை முடிந்த நிலையில், நெல் சாகுபடிக்காக அவுரி செடி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, ஐ.ஆர். 20 நெல் ரகம் நாற்று விடும் பணி தொடங்கியுள்ளது. வரும் புரட்டாசி முதல், நெல் நடும் பணி தொடங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X