சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்டி கேட்டு மிரட்டல்; வழக்கு பதிந்து விசாரணை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர், வெங்கமேட்டில் வட்டி கேட்டு பெண்களை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கரூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மனைவி சுமதி, 37; இவர், பாலாஜி, தினேஷ், சிலம்பரசன் ஆகியோரிடம், 65 ஆயிரம் ரூபாய், 10 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சுமதியிடம், பாலாஜி உள்பட மூன்று பேரும் வட்டி கேட்டு மிரட்டல் விடு த்துள்ளனர்.

கரூர்: கரூர், வெங்கமேட்டில் வட்டி கேட்டு பெண்களை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


கரூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மனைவி சுமதி, 37; இவர், பாலாஜி, தினேஷ், சிலம்பரசன் ஆகியோரிடம், 65 ஆயிரம் ரூபாய், 10 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சுமதியிடம், பாலாஜி உள்பட மூன்று பேரும் வட்டி கேட்டு மிரட்டல் விடு த்துள்ளனர். இதுகுறித்து, போலீசில் சுமதி புகார் செய்தார். இதையடுத்து, பாலாஜி, தினேஷ், சிலம்பரசன், தண்டபாணி ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதேபோல், கரூர் அருகம்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சித்ரா, 36, என்பவர், ஐந்து பேரிடம், 96 ஆயிரத்து, 500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி, அசல் தொகை கேட்டு மிரட்டுவதாக அளித்த புகார்படி, பாலாஜி, தினேஷ், சிலம்பரசன், தண்டபாணி, சித்ரா, சரவணன், கணேசன் ஆகியோர் மீது, வெங்க மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X