வாலிபருக்கு அரிவாள் வெட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Added : செப் 04, 2021
Share
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலம், சம்பந்திபூரை சேர்ந்தவர்கள் ரோகித் குமார், 19; அமர்ஜித், 20; இருவரும், கரூர் அருகே புகளூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில், வேலை செய்து வருகின்றனர். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும், 28 வயதுடைய பெண்ணும் அமர்ஜித்தும் ஓராண்டாக பழகி வந்தனர். அதையறிந்த அந்த பெண்ணின் கணவர்

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலம், சம்பந்திபூரை சேர்ந்தவர்கள் ரோகித் குமார், 19; அமர்ஜித், 20; இருவரும், கரூர் அருகே புகளூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில், வேலை செய்து வருகின்றனர். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும், 28 வயதுடைய பெண்ணும் அமர்ஜித்தும் ஓராண்டாக பழகி வந்தனர். அதையறிந்த அந்த பெண்ணின் கணவர் ரவிச்சந்திரன், 38, கடந்த, 1ல் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சென்று ரோகித் குமாரிடம் அமர்ஜித் குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அரிவாளால் ரோகித்குமாரை வெட்டினார். காயமடைந்த ரோகித் குமார், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலாயுதம்பாளையம் போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X