அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதி தலைவராக முடியாது'

Added : செப் 04, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க.,வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நான்கு
 'பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதி தலைவராக முடியாது'

சென்னை:''தி.மு.க.,வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நான்கு தொகுதிகளில், பா.ஜ., வெற்றிக்கு பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில், பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.காலத்தின் கட்டாயத்தால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தே தீரும்.

தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தினால் அசிங்கப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே, பெரிய தலைவர்களாக வர முடியும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. தி.மு.க.,வில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.

வரும் 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது பா.ஜ.,வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி, உங்களை தேடி வரும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-செப்-202108:33:23 IST Report Abuse
Matt P அப்போ அண்ணனை பொத்தி பொத்தி வளக்கலையா? நீண்ட காலம் பொது சேவையில் இருக்கிறார் என்பதால் அவரால் முடிந்தது என்கிறீரா?
Rate this:
Cancel
PARTHIBAN N - chennai,இந்தியா
09-செப்-202119:34:42 IST Report Abuse
PARTHIBAN N adhane
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
09-செப்-202116:46:35 IST Report Abuse
karuppasamy நாட்டின் அடுத்த பிரதமர் அண்ணாமலையார் , அடுத்த குடியரசு தலைவர் முருகனார் அடுத்த நார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X