சிவாலயங்களில் பிரதோஷ விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் பிரதோஷ விழா

Added : செப் 04, 2021
Share
திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள்

திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன.

மண்டலமாணிக்கம் கைலாசநாதர், அரும்பவள நாயகி அம்மன் கோயிலில் ஆவணி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. நந்திக்கு பால், பன்னீர்,சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் நடந்தன. சிவன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X