பொது செய்தி

தமிழ்நாடு

விடிய விடிய மழை: 351 மி.மீ., பதிவு

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்யத்துவங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விட்டு

நாமக்கல்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்யத்துவங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு விடியவிடிய பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை, 7:00 மணி வரை பெய்த மழை விபரம் பின்வருமாறு (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி, 25, குமாரபாளையம், 18.20, மங்களபுரம், 35.60, மோகனூர், 30, நாமக்கல், 15, ப.வேலூர், 15, புதுச்சத்திரம், 21, ராசிபுரம், 84.40, சேந்தமங்கலம், 25, திருச்செங்கோடு, 36, கலெக்டர் அலுவலகம், 12, கொல்லிமலை, 34 என, மொத்தம், 351.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X