பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளையபுரத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை

Added : செப் 04, 2021
Share
Advertisement
வெள்ளையபுரம் : வெள்ளையபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.திருவாடானை அருகே வெள்ளயைபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. வெள்ளையபுரம், ஓரியூர், பனஞ்சாயல், சிறுகம்பையூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்இங்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். தினமும் 150க்கும்

வெள்ளையபுரம் : வெள்ளையபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

திருவாடானை அருகே வெள்ளயைபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. வெள்ளையபுரம், ஓரியூர், பனஞ்சாயல், சிறுகம்பையூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்இங்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். தினமும் 150க்கும் மேற்பட்ட புறநோயாளிகள்பயனைடைகின்றனர். இரண்டு செவிலியர்கள் பகல், இரவு ஷிப்ட் என பணியாற்றுகின்றனர்.

முறையான சிகிச்சை இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். இங்குள்ள மருந்தாளுனர் பணியும் காலியாக இருப்பதால் அப்பணியிலும் கூடுதல் பொறுப்பாக பணி செய்ய வேண்டியதுள்ளது.

இது குறித்து புலியூர் உமாமணி கூறியதாவது:ஒரு டாக்டர் பணியாற்றுகிறார். அவசரத்திற்கு ரத்தபரிசோதனை கூட செய்ய முடியவில்லை. டாக்டரே அனைத்து பணிகளையும் செய்யவேண்டியுள்ளது.அதிகமான கிராம மக்கள் பயனைடைவதால் கூடுதலாக செவிலியர்களை நியமனம் செய்ய மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X