பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நகராட்சி பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடந்தது. குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் மிகவும் சேதமான நிலையில் இருந்தது. புதிய கட்டடமாக மாற்றக்கோரி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த உமா, ராஜீவ் ராமசாமி மற்றும் ஒசாட் பொது நல அமைப்பினர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நகராட்சி பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடந்தது. குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் மிகவும் சேதமான நிலையில் இருந்தது. புதிய கட்டடமாக மாற்றக்கோரி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த உமா, ராஜீவ் ராமசாமி மற்றும் ஒசாட் பொது நல அமைப்பினர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறை கட்டடம் கட்டி கொடுத்தனர். அதன் திறப்பு விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். கட்டடம் கட்டி கொடுத்தவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X