குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர், உறுப்பினர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர், உறுப்பினர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : செப் 04, 2021
Share
நாமக்கல்: இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு, தலைவர், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும்

நாமக்கல்: இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு, தலைவர், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் உளவியல், மனநலம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனிதவளம், கல்வி, மனிதவள மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி, குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில், 7 ஆண்டு பணி. அல்லது இவற்றில் பட்டம் பெற்று பணியாற்றி வரும் தகுதி வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக, ஒரு நபர், இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதியானவர். விண்ணப்ப படிவத்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள், 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.78ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் சாலை, நாமக்கல் -637 001. இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X