பொது செய்தி

தமிழ்நாடு

விதை உற்பத்தியாளராக விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான விதை உற்பத்தியில் அரசு விதை உற்பத்தியாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒரு சில தனியார் விதை உற்பத்தியாளர்களும், சிறியளவில் விதை உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்தாண்டிலிருந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர்

நாமக்கல்: விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான விதை உற்பத்தியில் அரசு விதை உற்பத்தியாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒரு சில தனியார் விதை உற்பத்தியாளர்களும், சிறியளவில் விதை உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்தாண்டிலிருந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் விதைப்பண்ணை பதிவு செய்து தங்கள் நிறுவனத்தின் பேரில் விதை விற்பனை செய்து வருகின்றனர். ஆர்வமுள்ள சில உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக விதை உற்பத்தியில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. எனவே, விதை உற்பத்தி செய்ய விரும்பும் தனியார் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் விதை உற்பத்தியாளராக இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர், அறை எண்-10, தரைதளம், கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகம், நாமக்கல் என்ற முகவரியிலும், 04286 - 291401 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X