தமிழகத்தில் அகழாய்வு பணிகள் தொடரும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் அகழாய்வு பணிகள் தொடரும்'

Added : செப் 04, 2021
Share
சென்னை:சட்டசபையில், தொல்லியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக தொல்லியல் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள், உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதிலும், கீழடி அகழாய்வுகள் பலரையும் வியப்படைய செய்துள்ளன. இதுபோன்ற அகழாய்வுகள் தேவை தானா என்ற குரலும் ஒலிக்கிறது. தமிழ் மொழியின் தொன்மை என்பது, 9ம்

சென்னை:சட்டசபையில், தொல்லியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழக தொல்லியல் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள், உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதிலும், கீழடி அகழாய்வுகள் பலரையும் வியப்படைய செய்துள்ளன. இதுபோன்ற அகழாய்வுகள் தேவை தானா என்ற குரலும் ஒலிக்கிறது. தமிழ் மொழியின் தொன்மை என்பது, 9ம் நுாற்றாண்டுக்கு பின் ஆரம்பித்தது என்று, ஒரு காலத்தில் கூறினர். தமிழனுக்கு தனி அடையாளம் கிடையாது என்றனர்.

தமிழரின் தொன்மையை அறிய, தமிழ் இலக்கியங்களை தவிர வேறு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் கேட்டனர்.தமிழி கல்வெட்டுகள் வாயிலாக, தமிழின் தொன்மை நிரூபிக்கப்பட்டது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் புளோரிடாவில் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், தமிழின் தொன்மை கி.மு., 6ம் நுாற்றண்டு என்று தெரியவந்துள்ளது.

கங்கை சமவெளியை போன்று, வைகை சமவெளியிலும் நகர நாகரீகம் இருந்ததுள்ளது, கீழடி அகழாய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் தொல்லியல் அகழாய்வை தொடர்ந்து நடத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ந்து அகழாய்வுகள் நடத்தப்படும்.

தமிழின் தொன்மை, உரிமை, பண்பாட்டை உலக அரங்கில் எடுத்து வைக்கும் முயற்சியில், தொல்லியல் துறை ஈடுபடும்.நம் கலை செல்வங்கள், அருங்காட்சியங்கள், மரபு செல்வங்கள், கலைக்கூடங்களை, வெளிநாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X