பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்திலேயே தடுப்பூசி!

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:பின்னலாடை தொழில் நகரான திருப்பூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வேலைவாய்ப்புக்காக புதிதாக ஏராளமானோர் வருகின்றனர். பெரும்பாலும் ரயில் மூலம் அதிகம் பேர் வருகின்றனர்.தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்வே ஸ்டேஷனில் தொற்று பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 40 ஆயிரம் பேர் வரை மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் 27 பேருக்கு தொற்று
 ரயில் நிலையத்திலேயே தடுப்பூசி!

திருப்பூர்:பின்னலாடை தொழில் நகரான திருப்பூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வேலைவாய்ப்புக்காக புதிதாக ஏராளமானோர் வருகின்றனர். பெரும்பாலும் ரயில் மூலம் அதிகம் பேர் வருகின்றனர்.தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்வே ஸ்டேஷனில் தொற்று பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 40 ஆயிரம் பேர் வரை மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் 27 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பூருக்கு ரயிலில் வந்திறங்கும் வெளி மாநிலத்தினர், தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. தினமும் ரயில்வே ஸ்டேஷனில் 500 பேர் என்ற அளவில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.இம்முகாமை நேற்று மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X