பொது செய்தி

தமிழ்நாடு

சதொற்று உருவாக்கிய 'வர்த்தக வாய்ப்பு' ;முழு கவச உடை தயாரிப்பில் நாட்டுக்கே வழிகாட்டிய திருப்பூர்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
.பி.இ., கிட்' எனப்படும் பிரத்யேக முழு கவச உடைகளுக்கு இப்படியொரு கிராக்கி ஏற்படும் என்று யாருக்கு தெரியும்? கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை உருவானபோது, இந்த உடைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுவரை, மருத்துவத் தேவைகளுக்கான, நம் நாடு, இவற்றை, இறக்குமதி செய்து வந்தது; திடீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, திணற வேண்டியிருந்தது.தொற்று பரவல் காரணமாக, திருப்பூர் பின்னலாடை

.பி.இ., கிட்' எனப்படும் பிரத்யேக முழு கவச உடைகளுக்கு இப்படியொரு கிராக்கி ஏற்படும் என்று யாருக்கு தெரியும்? கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை உருவானபோது, இந்த உடைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுவரை, மருத்துவத் தேவைகளுக்கான, நம் நாடு, இவற்றை, இறக்குமதி செய்து வந்தது; திடீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, திணற வேண்டியிருந்தது.தொற்று பரவல் காரணமாக, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது, 'பி.பி.இ., கிட்' தயாரிப்புக்கான வாய்ப்புகள் கிடைத்தபோது, அதை திருப்பூர், நன்கு பயன்படுத்திக்கொண்டது.
திருப்பூரின்பங்களிப்புதற்போது, 'பி.பி.இ., கிட்'கள், நாடு முழுவதும், தாராளமாக கிடைப்பதற்கு, அச்சாரமிட்டதில், திருப்பூரின் பங்களிப்பு பிரதானமானது. தற்போது, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும் சுயமாக, 'பி.பி.இ., கிட்' உற்பத்தியில் ஈடுபடுவதற்கு உத்வேகமாகவும், திருப்பூர் தொழில்துறையினர் விளங்கினர்.

தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களுக்கும், பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பு டன், பி.பி.இ., கிட்கள் தயாரித்து அனுப்பிய, திருப்பூரை சேர்ந்த அனிதா சேகர், நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:முதல் அலை துவக்கத்தில், உடனடியாக, 500 'பி.பி.இ., கிட்'கள் தேவை என்று, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள், எங்கள் நிறுவனத்தை அணுகினர். அப்போது எங்களுக்கும்'பி.பி.இ., கிட்' தயாரிப்பு குறித்த அனுபவம் கிடையாது.குழந்தைகள் உடைகளில் பயன்படுத்தப்படும் 'நான் ஓவன்' துணிகள், எங்களிடம் இருந்தன. அவற்றின் உதவியுடன், 'பி.பி.இ., கிட்' உருவாக்க முடியும் என்பது அப்போதுதான் தெரிந்தது. பின்னலாடைத்துறையின் அனுபவம், இவற்றை எளிதாக உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் வளர்த்தது.

கதவுகள் திறந்தன

நாடு முழுவதும் 'பி.பி.இ., கிட்'கள் லட்சக்கணக்கில் தேவைப்பட்டன. தொற்று காரணமாக, பின்னலாடை நிறுவனங்கள் மூடிக்கிடந்தன.'பி.பி.இ., கிட்' தயாரிப்புக்காக, பின்னலாடை நிறுவனங்கள் கதவுகளைத் திறந்தன.ராணுவத்தினர், தெலுங்கானா, ஒடிசா, உ.பி., உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெகுவிரைவாகவும், தரத்துடனும் பி.பி.இ., கிட்கள் தயாரிக்கப்பட்டு, விமானம் மூலம், அவை வினியோகிக்கப்பட்டன.தெலுங்கானாவுக்கு, 'பி.பி.இ., கிட்'கள் உடனடி தேவையாக இருந்தபோது, அந்த மாநில தலைமைச்செயலாளர் மூலம், மாநில முதல்வரே, தொடர்பு கொண்டு பேசி, 'பி.பி.இ., கிட்'களை விரைந்து தயாரித்து, உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

உயிரைபணயம் வைத்து...'பி.பி.இ., கிட்'கள் தயாரிப்பில், திருப்பூரில் உள்ள பிரபல ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டன. தொற்று காலத்தில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே, உயிரைப் பணயம் வைத்துதான், இத்தகைய பணியைத் தொழில்துறையினரும், தொழிலாளரும் மேற்கொண்டனர்.திருப்பூர் நிறுவனங்கள் பல, பொருளாதாரத்தில் தடுமாறாமல் இருப்பதற்கு, இது உதவிகரமாக இருந்தது.

தற்போது, 'பி.பி.இ., கிட்'டுக்கு கிராக்கி இல்லை. நாடு, இதன் உற்பத்தியில், தன்னிறைவு பெற்றுள்ளதோடு, இவற்றை ஏற்றுமதியும் செய்கிறது. இதற்கு காரணமாக, திருப்பூர் அமைந்தது எனலாம்.'பி.பி.இ., கிட்'டுக்கான கிராக்கி என்பது, குறுகிய கால அளவுக்கே நீடித்தது. அந்த நேரத்தில்,திருப்பூர் தொழில்முனைவோர் எந்தத் தயக்கமும் இன்றி, தாங்கள் இதுவரை மேற்கொண்டிராத பணியை வெற்றிகரமாக சாதித்துக்காட்டினர்.

இதற்கு பின்னலாடைத்துறையில், அவர்கள் சந்தித்த சவால்களை முறியடித்து வெற்றிபெற்ற அனுபவம்தான் கைகொடுத்தது.சாதிக்க வாய்ப்புகள்இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், திருப்பூர் நிறுவனங்கள் பொருளாதார மேலாண்மையில் கவனம் செலுத்தினால், லாபகரமாக, ஆடை தயாரிப்புகளை மேற்கொண்டு, தொடர்ந்து சாதிக்க முடியும்.வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவற்றை எக்காரணம் கொண்டும் நழுவவிட்டு விடக்கூடாது. உரிய தரத்துடன் ஆர்டர்களை மேற்கொள்வோரை என்றுமே, தொழில், உயர்த்திக்கொண்டே இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X