தலிபான் துப்பாக்கி சூடு 17 பேர் பலியான பரிதாபம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
காபூல்:ஆப்கானிஸ்தானில் பஞ்சஷீர் மாகாணத்தையும் கைப்பற்றியதாக கூறி, தலைநகர் காபூலில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். எனினும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்ற, ஆப்கானிஸ்தான்

காபூல்:ஆப்கானிஸ்தானில் பஞ்சஷீர் மாகாணத்தையும் கைப்பற்றியதாக கூறி, தலைநகர் காபூலில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். எனினும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்ற, ஆப்கானிஸ்தான் தேசிய கிளர்ச்சிப் படையினருடன், தலிபான் அமைப்பினர் சண்டையிட்டு வந்தனர். தொடர்ந்து நீடித்து வந்த அந்த மோதலின் இறுதியில் பஞ்சஷீர் பள்ளத்தாக்கு தலிபான் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாங்கள் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் இரவு நாலாபுறமும் துப்பாக்கியால் சுட்டு தலிபான் அமைப்பினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

காயமடைந்த 41 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையே தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத், தன் 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:பஞ்சஷீர் மாகாணத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. பஞ்சஷீரை தலிபான் கைப்பற்றினால், அதுவே என் கடைசி நாளாக இருக்கும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X