சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 லட்சம் பொருட்கள்; மீட்டது காவல்துறை

Updated : செப் 05, 2021 | Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் நடந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கடந்த, ஜூன் முதல் ஆக., வரை மூன்று மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று
 ரூ.25 லட்சம் பொருட்கள்; மீட்டது காவல்துறை

திருப்பூர்:திருப்பூரில் நடந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

கடந்த, ஜூன் முதல் ஆக., வரை மூன்று மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் வனிதா, துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி ஆகியோர் பங்கேற்று, உரியவர்களிடம் பணம், மொபைல் போன், டூவீலர் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் கூறியதாவது:திருப்பூர் மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால், பல்வேறு வெளி மாவட்டங்கள், வெளி மாநில தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளனர். குற்றங்களை தடுக்க, அதிகப்படியான ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பான நகரமாக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.குற்ற வழக்குகளில் தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பொருட்களை மீட்டுள்ளனர்.

38 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள், 73 மொபைல் போன் மாயமான வழக்குகளில், 53 பேர் கைது செய்யப்பட்டனர். 19 டூவீலர், ஒரு நான்கு சக்கர வாகனம், ரொக்கம், 7 லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய் மற்றும் 86 மொபைல் போன்கள், 'டிவி', ஹோம் தியேட்டர் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X