பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலைய கடை பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கடைகளில் இதுவரை தடுப்பூசி போடாத பணியாளர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடந்தது.கள்ளக்குறிச்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி பஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.அங்குள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை முதல் தவணை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கடைகளில் இதுவரை தடுப்பூசி போடாத பணியாளர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடந்தது.கள்ளக்குறிச்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி பஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.அங்குள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசி போடாத நபர்கள் 40 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.தொடர்ந்து, அங்கு பொது இடங்களில் புகைப்பிடித்ததாக 10 பேருக்கு தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, காமராஜ், விக்னேஷ்வரன், கந்தசாமி, செவிலியர்கள் கிருஷ்ணகுமாரி, ஆனந்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X