பொது வாழ்க்கையில் 20 ஆண்டு: மோடியை பாராட்டி நிகழ்ச்சிகள்| Dinamalar

இந்தியா

பொது வாழ்க்கையில் 20 ஆண்டு: மோடியை பாராட்டி நிகழ்ச்சிகள்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 2001 அக்., 7ல் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார்.பொது சேவையில் அவர் 20 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர்களுக்கு, தேசிய தலைவர் நட்டா
பொது வாழ்க்கை, 20 ஆண்டு மோடி, பாராட்டி நிகழ்ச்சிகள்

புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 2001 அக்., 7ல் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார்.
பொது சேவையில் அவர் 20 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர்களுக்கு, தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:பிரதமரின் 20 ஆண்டு பொது சேவையை பாராட்டும் வகையில், 20 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுதும் நடத்த வேண்டும். மோடியின் பிறந்த நாளான செப்., 17ல் இது துவங்கப்படும்.அவரை வாழ்த்தி ஐந்து கோடி தபால் கார்டுகளை கட்சியினர் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு மற்றும் தடுப்பூசி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து 'பேனர்'கள் வைக்க வேண்டும்.


latest tamil news



அவரது சேவைகளை நினைவுபடுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று, ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்குவது குறித்து விளக்கி, 'வீடியோ'வாக பதிவு செய்ய வேண்டும்.
இளைஞர் பிரிவினர் சார்பில் ரத்த தான முகாம்; உத்தர பிரதேசத்தில் 71 இடங்களில் கங்கையை துாய்மை செய்யும் பணி நடத்தப்படும். மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2ல், நாடு முழுதும் துாய்மைப் பணியில் கட்சியினர் ஈடுபட வேண்டும்.பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து, பிரபலங்கள் பேசும் கருத்தரங்குகள் பல மொழிகளில் நடத்தப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X