பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் கல்வியை கற்று வந்த மாணவர்களுக்கு ஆசுவாசம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. தொற்றால், வீடுகளிலேயே முடங்கி, ஆன்லைன் கல்வியை கற்று வந்த மாணவர்களுக்கு, இது சற்று ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது.முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் கட்டாயம்; ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களை எண்ணிக்கைக்கேற்ப பிரித்து,

ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. தொற்றால், வீடுகளிலேயே முடங்கி, ஆன்லைன் கல்வியை கற்று வந்த மாணவர்களுக்கு, இது சற்று ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது.முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் கட்டாயம்; ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களை எண்ணிக்கைக்கேற்ப பிரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வருமாறு அழைப்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வர விரும்பாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தொலைவழிக் கல்வியைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும்கூட, பள்ளி துவங்கியதால், நேரடியாக மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்பதே, பாடங்களைத் திறம்பட கவனிப்பதற்கு உதவும்.

சிரத்தை கூட வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளிகளில், தொற்று தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.இரண்டாம் அலை காரணமாக, 10, பிளஸ் 2 தேர்வுகளை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்தாண்டும் அதுபோல் நடந்துவிடுமோ என்ற ஐயம், பெற்றோரிடமும், மாணவர்களிடமும் உள்ளது. இதுவே, மாணவர்கள் படிப்பில், சிரத்தையின்றி இருப்பதற்கு காரணமாகிவிடக் கூடாது. அரசுப்பள்ளிகளைப் பொறுத்தவரை, பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இது ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், எளிதாக சாத்தியமாகும்.

முதலில் பாடங்களை நடத்துவதென்பதைவிட, உளவியல்ரீதியாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீதான ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்துவது, அவசியமானதாக உள்ளது.விழிப்புணர்வு ஊட்டுங்கள்''மாணவர்கள் என்றாலே, உற்சாகமாக இருப்பர். எத்தகைய கட்டுப்பாடு விதித்தாலும்கூட, இடைவேளை நேரங்களிலும், உணவு சாப்பிடும் போதும், ஒன்று கூடுவதை கட்டுப்படுத்துவதும் எளிதானதல்ல. முக கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள், அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

இதை படத்துடனோ, துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவோ திரும்ப திரும்ப வலியுறுத்துவது அவசியமானது.12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசி கட்டா யம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதும் முக்கியம்'' என்பது மருத்துவர்களின் அறி வுரையாக இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X