சரித்திரமும், அறுசுவையும்... சந்ததிக்கு வார்க்கும் முகில்!

Added : செப் 04, 2021
Advertisement
ரு மென் பொறியாளர் போல காணப்படும், இவரா, வரலாற்றின் பக்கங்களை எழுத்தாக்கியது என தோன்றுகிறது. பெயருக்கேற்றவாறு, அவரின் சிந்தனையும், பேச்சும் மென் மையாக இருக்கிறது.துாத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட முகில், தற்போது சென்னையில் வசித்து கொண்டே தொடர்ந்து எழுதி வருகிறார். 2001ல் இருந்து எழுத்துலகில் பயணிக்கும் இவர், முகலாயர்கள், யூதர்கள், செங்கிஸ்கான் என, 35 புத்தங்கள்
 சரித்திரமும், அறுசுவையும்... சந்ததிக்கு வார்க்கும் முகில்!

ரு மென் பொறியாளர் போல காணப்படும், இவரா, வரலாற்றின் பக்கங்களை எழுத்தாக்கியது என தோன்றுகிறது. பெயருக்கேற்றவாறு, அவரின் சிந்தனையும், பேச்சும் மென் மையாக இருக்கிறது.துாத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட முகில், தற்போது சென்னையில் வசித்து கொண்டே தொடர்ந்து எழுதி வருகிறார். 2001ல் இருந்து எழுத்துலகில் பயணிக்கும் இவர், முகலாயர்கள், யூதர்கள், செங்கிஸ்கான் என, 35 புத்தங்கள் எழுதியுள்ளார். அவை, முற்றிலும், வரலாறு, உணவு சம்பந்தப்பட்டவை என்பது முகிலின் தனிப்பட்ட அடையாளம்.கடந்த, 2018ல் வெளியான 'அதே கண்கள்' படத்துக்கு வசனம் எழுதிய முகில், தொடர்ந்து திரைத்துறையிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். சமீபத்தில், திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் முகிலிடம், எழுத்து பயணம், அவரின் புத்தகங்கள் குறித்து பேசியதிலிருந்து...2001-02ல் கல்லுாரியில் படிக்கும் போதே, எழுத்தின் மீது எனக்கு நாட்டம் வந்து விட்டது. அதன்பின், 2006ல் 'சந்திர பாபு - கண்ணீரும், புன்னகையும்' என்ற கதை, 'தினமலர்' வாரமலரில் வெளியானது.இப்போது, 'உணவு சரித்திரம், பாகம் - 3' என்ற புத்தகத்தை எழுதி வருகிறேன். உணவு என்று எடுத்து கொண்டால் அதன் சரித்திரம் நீள்கிறது. அதனால், தொடர்ந்து பல பாகங்களை வெளியிடும் எண்ணமும் இருக்கிறது.மாணவர்களின் வாசிப்பு பழக்கம் குறித்து...சமூக ஊடகங்கள் வழியே அவர்களும் படிக்கின்றனர். ஒரு விஷயத்தை, சுவாரசியமாக, படிக்க துாண்டும் வகையில் எழுதினால், கண்டிப்பாக வரவேற்கப்படும். உதாரணாக, உப்பு குறித்து பாடப்புத்தகத்தில் ஒரு சில வரியில் படித்து விடுகிறோம். ஆனால், அதற்கென தனி வரலாறு உள்ளது.அதையும் படிக்க ஆர்வலர்கள் உள்ளனர். இப்போது மிக சுருக்கமாக எழுதுவது ஒரு தனி பாணியாகி வருகிறது. அதிலும், வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் ஆகியவற்றில், புத்தகம் சார்ந்த பல குழுக்கள் செயல்படுகின்றன, அவற்றிலும் வாசிக்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறை மாறும் போது, புதிய வாசகர்கள் வந்து கொண்டேயிருப்பர்.உங்கள் புத்தகம் பெரும்பாலும் வரலாற்றை சார்ந்து உள்ளதே...ஆம், வரலாறு குறித்து எழுதுவது எனக்கு தனி விருப்பம். அதிலும், ஆதி மனிதன் துவங்கி, கடந்த நுாற்றாண்டு வரை பயணம் எப்படி இருந்தது என்பது குறித்து, 'பயண சரித்திரம்' என்ற புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில், பாகம்-2 வெளியாகிறது.மக்களின் வாசிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளதா...ஒரு புத்தக கண்காட்சிக்கு மக்கள் கூட்டமாக வருவர். பல புத்தகத்தை பார்ப்பர். சரி வந்துவிட்டோம், என ஒன்றை வாங்கி செல்வர். ஆனால், வாசிப்பவர்கள் புத்தகங்களை தொடர்ந்து வாங்கி கொண்டே உள்ளனர். அவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. நான் கூட, பள்ளி வயதில், 'தினமலர் - சிறுவர் மலர்' படித்து தான், வாசிப்பு பழக்கம் உண்டானது.'டிஜிட்டல்' யுகத்தை, எவ்வாறு கையாள்கிறீர்கள்...ஆமாம், நாங்களும் தொடர்ந்து மாறி கொண்டே உள்ளோம். வாசிப்பும் கூட மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாறுவது இயல்பு தானே. இப்போது ஆடியோ புத்தகம் வெளிவருவது அதிகமாகி விட்டது. பயணம் செல்வோர், அதனை கேட்டு கொண்ட செல்கின்றனர். இப்படி ஏதாவது ஒரு வகையில், புத்தகங்கள் மனிதர்களோடு தொடர்ந்து பயணித்து கொண்டேயிருக்கும்.எழுத்துலகில், உங்களது லட்சியம்...கிழக்கிந்திய கம்பெனியின் முழு வரலாற்றை எழுத திட்டமிட்டுள்ளேன். மிக விரைவாக அதற்கான பணிகளை துவக்குவேன். 'அகம், புறம், அந்தப்புரம்' புத்தகத்தில் எழுதியதை விட, இன்னும் நிறைய சமஸ்தானங்களின் வரலாற்றை எழுதவும் யோசனை உள்ளது. அந்தளவுக்கு விஷயம் கொட்டிக்கிடக்கிறது.பள்ளி வயதில், 'தினமலர் -சிறுவர் மலர்' படித்து தான்,வாசிப்பு பழக்கம் உண்டானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X