அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதி தலைவராக முடியாது'

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை :''தி.மு.க.,வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,
 'பொத்தி பொத்தி , உதயநிதி தலைவர், முடியாது'

சென்னை :''தி.மு.க.,வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நேற்று நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நான்கு தொகுதிகளில், பா.ஜ., வெற்றிக்கு பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும்அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில், பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.


காலத்தின் கட்டாயத்தால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தே தீரும். தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தினால் அசிங்கப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே, பெரிய தலைவர்களாக வர முடியும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. தி.மு.க.,வில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.வரும் 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது பா.ஜ.,வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி, உங்களை தேடி வரும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.


விஜயேந்திரரிடம் முருகன் ஆசி



காஞ்சிபுரம்: மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார்.மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமியை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட பா.ஜ.., தலைவர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ''ராமேஸ்வரம் முதல் காசி வரை, காஞ்சிபுரம் வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த மனு, மடத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
05-செப்-202122:37:08 IST Report Abuse
Elango மக்கள் தேர்ந்தெடுத்து எம்எல்ஏ ஆக்கிவிட்டார்களே ?? நமக்கு அதற்கு வக்கில்லையே ?? இதில் வீடியோ தொல்லை வேறு
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
05-செப்-202122:13:01 IST Report Abuse
Ramamurthy N என்ன இது திடீரென்று பெட்ரோல் டீசல் விலை 10 பைசா குறைகிறது? என்று எண்ணினேன், வரும் 30ம் தேதி மேற்கு வங்கத்தில் இடை தேர்தல் . ஏற்கனவே மம்தாவை ஜெயிக்க முடியல, டெபாசிட் ஆவது கிடைக்கணுமே என்று பயம், ஆனாலும் சமையல் எரிவாயு விலை பயமுறுத்துகிறதே?
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
05-செப்-202119:38:16 IST Report Abuse
வந்தியதேவன் ///பொத்தி பொத்தி வளர்த்தாலும்..../// நீங்க பொத்திட்டு போங்க...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X