தடைக்கல் தாண்டினார் சாதித்த இளம் விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தடைக்கல்' தாண்டினார் சாதித்த இளம் விவசாயி

Added : செப் 04, 2021
Share
பல்லடம்:பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 30, விவசாயி. இவருக்கு, சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் முழுவதும் ஓடை கற்கள் பரவிக் கிடந்தன. ஓடைக் கற்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.ரமேஷ் கூறுகையில், ''இந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்து, ஓடைக்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன்.
 'தடைக்கல்' தாண்டினார் சாதித்த இளம் விவசாயி

பல்லடம்:பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 30, விவசாயி. இவருக்கு, சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் முழுவதும் ஓடை கற்கள் பரவிக் கிடந்தன. ஓடைக் கற்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.ரமேஷ் கூறுகையில், ''இந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்து, ஓடைக்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். ஏறத்தாழ, 10 லோடு ஓடைக்கற்கள் அகற்றப்பட்டது.தொடர்ந்து, நிலத்தால் உழவு செய்து, ஒன்றரை ஏக்கரில் வெங்காயம் நடவு செய்தேன். அதில், 13 டன் வெங்காயம் கிடைத்தது. இரண்டாவது முறையாக மீண்டும் வெங்காயம் நடவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறை உழவு செய்யும் போதும் ஓடைக்கற்கள் வருகின்றன. அவற்றை அகற்றி விட்டு விவசாயம் செய்கிறேன்'' என்றார்.விவசாயத்தில், தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றம், நோய் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள், விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. தொழிலுக்கு தடைக்கல்லாக இருந்த ஓடைக்கற்களை அப்புறப்படுத்தி விட்டு, விவசாயத்தில் சாதித்த ரமேஷின் முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X