பயிற்சி பெறுபவர்களுக்கு மரக்கன்று வினியோகம்| Dinamalar

பயிற்சி பெறுபவர்களுக்கு மரக்கன்று வினியோகம்

Added : செப் 04, 2021
திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு, இலவச தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இப்பயிற்சி நிறுவனத்தில், மரக்கன்று வழங்கும் விழா நேற்று நடந்தது. உடுமலை, தாராபுரம், குண்டடம், ஊத்துக்குளி பகுதிகளைச்சேர்ந்த 35 பேர், இலவச போட்டோ கிராபி மற்றும்
 பயிற்சி பெறுபவர்களுக்கு மரக்கன்று வினியோகம்

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு, இலவச தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இப்பயிற்சி நிறுவனத்தில், மரக்கன்று வழங்கும் விழா நேற்று நடந்தது. உடுமலை, தாராபுரம், குண்டடம், ஊத்துக்குளி பகுதிகளைச்சேர்ந்த 35 பேர், இலவச போட்டோ கிராபி மற்றும் வீடியோ கிராபி பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு, வன்னி, சப்போட்டா, வேம்பு, நாவல், வேங்கை, பூவரசு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சென்னை தலைமை அதிகாரி, அன்புக்கரசு, மரக்கன்று வழங்கினார். திருப்பூர் பயிற்சி மைய இயக்குனர் பூபதி ராஜா, பயிற்சியாளர் சீனிவாசன் மற்றும் பயிற்சி மைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X