பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தின விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
விகாஸ் வித்யாலயாதிருப்பூர், ஸ்ரீநகரில், விகாஸ் வித்யாலயா பள்ளி சார்பில், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆலோசகர் டாக்டர் சம்பத்ராஜ், ஆசிரியர் பெருமைகள் குறித்து பேசினார். பள்ளி தலைமையாசிரியர் அனிதா தலைமையில், ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.ஏ.வி.பி., பள்ளிதிருமுருகன்பூண்டி

விகாஸ் வித்யாலயாதிருப்பூர், ஸ்ரீநகரில், விகாஸ் வித்யாலயா பள்ளி சார்பில், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆலோசகர் டாக்டர் சம்பத்ராஜ், ஆசிரியர் பெருமைகள் குறித்து பேசினார். பள்ளி தலைமையாசிரியர் அனிதா தலைமையில், ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.ஏ.வி.பி., பள்ளிதிருமுருகன்பூண்டி ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, வரவேற்றார். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி, நன்றி கூறினார்.ஸ்பிரிங் மவுண்ட் பள்ளிதிருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் பள்ளி சார்பில், ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கட்டான கொரோனா காலத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கல்வியில் எவ்விதமான இடையூறு ஏற்படாமல், 'ஆன்லைன்' மூலமாகவும், பள்ளியிலும் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான கொரோனா விழிப்புணர்வோடு, தங்கு தடையின்றி கல்வியை போதித்து வரும் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருந்து வருகின்றனர்.அவர்களின் அர்ப்பணிப்பை போற்ற வார்த்தையில்லை. ஆசிரியர் தினத்தில், அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், திருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X