சட்டசபையில் பஜனைக்கு அறை கேட்கிறது பா.ஜ.,

Added : செப் 04, 2021
Share
Advertisement
ராஞ்சி:'ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கியது போல, ஹிந்துக்கள் ஹனுமன் பஜனைப் பாடல்கள் பாட அறை ஒதுக்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்திஉள்ளது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குடிகிராம் நகரில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டிய சட்டசபை கட்டடத்தை, 2019ல் பிரதமர்

ராஞ்சி:'ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கியது போல, ஹிந்துக்கள் ஹனுமன் பஜனைப் பாடல்கள் பாட அறை ஒதுக்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்திஉள்ளது.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குடிகிராம் நகரில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டிய சட்டசபை கட்டடத்தை, 2019ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஹிந்துக்கள் ஹனுமன் பஜனை பாடல்கள் பாட, ஐந்து அறைகள் அல்லது ஒரு கூடம் ஒதுக்கும்படி அரசுக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து ஜார்க்கண்ட் சட்டசபை முன்னாள் சபாநாயகரும், பா.ஜ., தலைவருமான சி.பி.சிங் கூறியதாவது:

முஸ்லிம் எம்.எல். ஏ.,க்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கப்பட்டதை எதிர்க்கவில்லை. அதேசமயம், ஹிந்து எம்.எல்.ஏ.,க்கள் ஹனுமன் பஜனை பாடல்கள் பாட அறை ஒதுக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். சட்டசபை வளாகத்தில் ஹனுமன் கோவில் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சபாநாயகர் அனுமதித்தால் எங்கள் செலவில் கோவில் கட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X