பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதை நடவு; தாமதம் பலன் தராது!

Added : செப் 04, 2021
Share
Advertisement
பொங்கலுார்:பனை மரங்களின் பயனை உணர்ந்த பலரும், தற்போது, பனை விதை நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் சில ஆண்டுகளாக நுாறு நாள் தொழிலாளர்களைக் கொண்டு பனை விதை நடவு செய்தது. ஆனால், அவற்றில் பெரும்பகுதி முளைக்கவில்லை என்பதே நிதர்சனம்.விவசாயிகள் கூறியதாவது:பனை விதையை நடவு செய்தால் மட்டும் முளைத்து விடாது. அதை சரியான பருவத்தில் நட வேண்டும். பனை மரங்களில் இருந்து

பொங்கலுார்:பனை மரங்களின் பயனை உணர்ந்த பலரும், தற்போது, பனை விதை நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் சில ஆண்டுகளாக நுாறு நாள் தொழிலாளர்களைக் கொண்டு பனை விதை நடவு செய்தது. ஆனால், அவற்றில் பெரும்பகுதி முளைக்கவில்லை என்பதே நிதர்சனம்.விவசாயிகள் கூறியதாவது:பனை விதையை நடவு செய்தால் மட்டும் முளைத்து விடாது. அதை சரியான பருவத்தில் நட வேண்டும். பனை மரங்களில் இருந்து பெரும்பாலான பழங்கள் பழுத்து கீழே விழுந்து கிடக்கின்றன. தற்போது, மழை துவங்கியுள்ளதால் அவை இன்னும் ஒன்றிரண்டு வாரங்களுக்குள் முளைத்துவிடும்.விதைகளை இன்னும், 15 நாட்களுக்குள் நட்டால் மட்டுமே முழு பயன் கிடைக்கும். அதன் பின் அவை முளைத்துபின் கருகிவிடும். வேர் கருகிய பின் நடுவது வீண் வேலை.பொதுமக்கள் பனையை விரும்பி வளர்க்க வேண்டுமானால் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பயன்களை அதிகரிக்க வேண்டும். முன்பு கள், பதநீர் இறக்கப்பட்டு வந்தது. தற்போது கள்ளுக்கு தடை உள்ளது. கருப்பட்டியுடன் கரும்புச் சர்க்கரையை கலக்கும் கும்பல் அதிகரித்து விட்டதால் லாபம் இல்லை. பனை தொழிலாளர்கள் தொழிலை விட்டு ஓடிவிட்டனர்.பனை தொழில் வீழ்ச்சி அடைந்ததால் பனை மரங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பயன்களை அதிகரிக்கச் செய்தல், மரம் ஏறும் கருவி கள் வழங்குதல், கலப்படத்தை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தால் மக்கள் தாமாக முன்வந்து பனை மரங்களை நடவு செய்ய துவங்கி விடுவர். அதற்கு முன் அரசு நுாறு நாள் தொழிலாளர்களை இன்னும் ஒரு வார காலத்திற்கு பனை விதைகளை மட்டுமே நடும் வேலையை கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X