சென்னை - அந்தமான் தேவை கப்பல் சேவை| Dinamalar

சென்னை - அந்தமான் தேவை கப்பல் சேவை

Added : செப் 04, 2021
Share
போர்ட்பிளேயர்:'சென்னை மற்றும் கோல்கட்டாவில் இருந்து அந்தமானுக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்க வேண்டும்' என, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.அந்தமான் - நிகோபார் எம்.பி.,யும், காங்., மூத்த தலைவருமான குல்தீப் ராய் சர்மா, அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேச தலைமை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: அந்தமான் - நிகோபாரைச் சேர்ந்த ஏராளமானோர் மருத்துவ

போர்ட்பிளேயர்:'சென்னை மற்றும் கோல்கட்டாவில் இருந்து அந்தமானுக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்க வேண்டும்' என, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் - நிகோபார் எம்.பி.,யும், காங்., மூத்த தலைவருமான குல்தீப் ராய் சர்மா, அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேச தலைமை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: அந்தமான் - நிகோபாரைச் சேர்ந்த ஏராளமானோர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை, கோல்கட்டாவிற்கு வந்துள்ளனர். அந்தமானுக்கு கப்பல் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், அவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை.

சென்னையில் இருந்து விமானத்தில் செல்ல 8,000 - 29 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. கோல்கட்டாவில் இருந்து அந்தமானுக்கு விமானத்தில் செல்ல 10ஆயிரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இவ்வளவு தொகையை செலுத்தி ஊர் திரும்ப முடியாமல் ஏராளமானோர் சென்னை, கோல்கட்டாவில் தங்கியுள்ளனர்.

விமானக் கட்டணம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் அன்றாடச் செலவினங்களை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே சென்னை, கோல்கட்டாவில் இருந்து, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு பயணியர் கப்பல் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X