உ.பி.,யில் டெங்கு: மத்திய குழு நேரில் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவிஉள்ளதை, அங்கு நேரில் ஆய்வு செய்த மத்திய குழு உறுதிப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ரத்தக்கசிவு காய்ச்சல்இங்குள்ள பிரோசாபாத் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.கடந்த 10

புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவிஉள்ளதை, அங்கு நேரில் ஆய்வு செய்த மத்திய குழு உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ரத்தக்கசிவு காய்ச்சல்இங்குள்ள பிரோசாபாத் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.கடந்த 10 நாட்களில் 50 குழந்தைகள் உட்பட 60 பேர் காய்ச்சலுக்கு பலியாகி விட்டனர். தகவல் அறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் நிபுணர் குழு பிரோசாபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் குழு காய்ச்சல் பாதிக்கப்பட்டோரிடம் ஆய்வு நடத்தியது. இதில் பிரோசாபாதில் டெங்கு காய்ச்சல் பரவிஉள்ளதை உறுதிப்படுத்தினர்.இது பற்றி மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூறியதாவது:பிரோசாபாதில் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் பரவி உள்ளது;

இது மிகவும் ஆபத்தான காய்ச்சல் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த காய்ச்சலால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவர். ஆக்ரா, மதுரா ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் துவங்கியுள்ளது. மதுராவில் டெங்கு காய்ச்சலுக்கு 11 குழந்தைகள் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


நடவடிக்கை



பிரோசாபாத் மாவட்டத்துக்கு நேற்று சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் நிலைமையை ஆய்வு செய்தார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியுள்ளதாவது:மாநிலம் முழுதும் டெங்கு காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதை அரசு மறைக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X