பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-மாநில நல்லாசிரியர் விருதுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கற்பித்தலில், புதிய உத்திகளைக் கடைபிடித்து, சமூக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

கள்ளக்குறிச்சி-மாநில நல்லாசிரியர் விருதுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கற்பித்தலில், புதிய உத்திகளைக் கடைபிடித்து, சமூக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.நடப்பாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் விபரம்:தலைமை ஆசிரியர்கள்சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சீனுவாசன், சின்னமணியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ேஷக்ஜாகீர் உசேன், பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளி ஜெயந்தி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பாரதி.முதுகலை ஆசிரியர்கள்கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜோதிலிங்கம் திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ராஜசேகரன். பட்டதாரி ஆசிரியர்கள்தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி விஸ்வநாதன், வடதொரசலுார் அரசு உயர்நிலைப் பள்ளி அனந்தகண்ணன், பரிகம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியர் அமுதன், ஆகிய 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு, மாவட்டத்தில் 6 பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக அந்தந்த மாவட்டத்திலேயே அமைச்சர், எம்.பி., கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் விருது வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X