பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மாநில அரசு சார்பில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மாநில அரசு சார்பில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு, தமிழகம் முழுதும் 385 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பெருமாள், மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் நடராஜன், கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் குரு.அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன், சிறுவானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவபாலன், ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை மாலினிதேவி.வாணியம்பாளையம் ஆனந்தா நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை சரசு, கிளியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை லட்சுமி ரேகா, செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அப்ரோஸ்கான் ஆகிய 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X