எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 1,242 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு - அரசிடம் அறிக்கை ; தேவை அதிரடி நடவடிக்கை!

Updated : செப் 05, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட, 1,242 ஏக்கர் பஞ்சமி நிலங்கள், பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வேளாண் நிலங்களே பஞ்சமி நிலங்கள். அதே
 கோவை, 1,242 ஏக்கர் பஞ்சமி நிலம், ஆக்கிரமிப்பு,,அறிக்கை ; தேவை அதிரடி நடவடிக்கை!

கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட, 1,242 ஏக்கர் பஞ்சமி நிலங்கள், பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வேளாண் நிலங்களே பஞ்சமி நிலங்கள். அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும், இந்த நிலங்களை விற்க முடியாது. அப்படி விற்றாலும், அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்யலாம்; இழப்பீடு கொடுக்கவும் அவசியமில்லை.தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, நீண்ட காலமாக புகார் உள்ளது. இது தொடர்பாக பேரறிவாளன் என்பவரின் மனுவை விசாரித்த ஐகோர்ட், பஞ்சமி நிலங்களின் நிலை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து கலெக்டர்களுக்கும் நில நிர்வாக ஆணையரால் 2017 மே 30ல் கடிதம் அனுப்பப்பட்டது.


949 பேரால் ஆக்கிரமிப்புகோவை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதில், பஞ்சமி நிலங்கள் பெருமளவில் பிற சமுதாயத்தினரின் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பரில், கோவை கலெக்டரால் அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனருக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 1,242 ஏக்கர் பஞ்சமி நிலங்கள், பிற சமுதாயத்தைச் சேர்ந்த, 949 பேர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், 102.40 ஏக்கர் நிலத்தில், 66 பேர் விவசாயம் செய்கின்றனர். மொத்தம் 33 பேர், 43.40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, தொழிற்சாலை மற்றும் வர்த்தக பயன்பாடுகளில் வைத்துள்ளனர். ஆறு ஏக்கர் நிலம், மனையிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 189 பேர், 289 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து பலவிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மொத்தம் 441.63 ஏக்கர் நிலங்கள், 296 பேர் பயன்பாட்டில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இவற்றைத் தவிர்த்து, 801 ஏக்கர் பஞ்சமி நிலம், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 653 பேருடைய பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நிபந்தனை மீறல்இவற்றில், பொள்ளாச்சி தாலுகாவில் 5.71 ஏக்கர், பேரூர் தாலுகாவில் 73.54 ஏக்கர் நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மதுக்கரை தாலுகாவில் 26.73 ஏக்கர் நிலமும், பொள்ளாச்சி தாலுகாவில் 5.76 ஏக்கர் நிலமும் நிபந்தனை மீறல் தொடர்பாக விசாரணையில் உள்ளது.கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், இதுபற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் ராமச்சந்திரன், 'பஞ்சமி நிலங்கள் கண்டிப்பாக மீட்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இந்த நிலங்களின் மதிப்பு இப்போது பல நுாறு கோடிகளைத் தாண்டும் என்பதால், மீட்பது அத்தனை எளிதான விஷயமாகத் தெரியவில்லை. அமைச்சர் சொன்ன வாக்குறுதி காப்பாற்றப்படுமா, பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். -நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIMARAN.N - Coimbatore,இந்தியா
08-நவ-202123:03:20 IST Report Abuse
MANIMARAN.N List of panchami land in coumbatore district
Rate this:
Cancel
MANIMARAN.N - Coimbatore,இந்தியா
08-நவ-202123:02:32 IST Report Abuse
MANIMARAN.N How we can findout panchami land in coimbatore district
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-செப்-202120:39:01 IST Report Abuse
M  Ramachandran விடியல் அரசுக்கு மற்றும் தீ மு க்கா கட்சிக்கும் தலைவலிய் கிளப்ப பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X