பொது செய்தி

தமிழ்நாடு

கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம்-கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு குறைந்ததால் ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.கல்வராயன்மலை மற்றும் கச்சிராயப்பாளையம் சுற்றுப்புற

கச்சிராயபாளையம்-கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு குறைந்ததால் ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.கல்வராயன்மலை மற்றும் கச்சிராயப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது.இதனால் கோமுகி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வரத்துவங்கியது. அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் தற்போது 31 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் கச்சிராயப்பாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X