வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிய ஸ்கேனர் கேமரா சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிய 'ஸ்கேனர் கேமரா' சோதனை

Added : செப் 04, 2021
Share
சென்னை: கொரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன 'ஸ்கேனர் கேமரா'வின் சோதனை ஓட்டம், சென்னையில் நடந்து வருகிறது.உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில், முதல் மற்றும் இரண்டாம் அலை தொற்று முடிந்த நிலையில், மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படக்கூடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றை தடுக்க, தடுப்பூசிகள்
வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிய 'ஸ்கேனர் கேமரா' சோதனை

சென்னை: கொரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன 'ஸ்கேனர் கேமரா'வின் சோதனை ஓட்டம், சென்னையில் நடந்து வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில், முதல் மற்றும் இரண்டாம் அலை தொற்று முடிந்த நிலையில், மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படக்கூடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றை தடுக்க, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வைரஸ் உருமாற்றம் அடைந்து, தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறியும் வகையில், 'பைவ் ஸ்டார்' அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம், நவீன 'ஸ்கேனர் கேமரா'வை தயாரித்துள்ளது.இந்த கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்த, முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டம் நடத்த, அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. முதல் கட்ட சோதனை ஓட்டம், மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாக, அம்மா மாளிகையில் நடந்து வருகிறது. இதன் வாயிலாக, தொற்று பாதிக்கக்கூடும் என்பவர்களை கண்டறிந்து, முன்கூட்டியே சிகிச்சை பெற அறிவுறுத்த முடியும் என்கின்றனர் அதன் நிர்வாகிகள்.

இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட உள்ளது என்றால், ஐந்து நாட்களுக்கு முன், அதற்கான அறிகுறிகள் தெரிய வரும். அவர்கள், இயல்பாக மற்ற இடங்களில் சுற்றுவதால், கொரோனா போன்ற வைரஸ் தொற்றுகள் அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்க்கும் வகையில், பிரேசில், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில், 'வைரல் சைன் ஸ்கேனர் கேமரா'வை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதன் வாயிலாக, ஒருவரின் நெத்தி, கண்கள், மூக்கு பகுதிகளில், வைரஸ், காய்ச்சல் அளவுகளை கண்டறிய முடியும்.இயல்பாக இருப்பவர்களுக்கு, பச்சை நிறமும், சற்று பாதிப்பு இருக்க கூடும் என்பவருக்கு ஆரஞ்ச் நிறமும், பாதிப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் வாயிலாக உறுதிப்படுத்தலாம். இதில், ஆரஞ்ச், சிவப்பு நிறம் வருவோரை, உரிய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கிறோம்.

இந்த ஸ்கேனர் கேமரா குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனரை அணுகியபோது, சோதனை ஓட்டம் நடத்திக் கொள்ள அனுமதியளித்தார். அதன் வாயிலாக மூன்று நாட்களில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதித்து உள்ளோம்.ஸ்கேனர் கேமராவிற்கு அனுமதி பெற, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் போன்றவற்றில் பயன்பாட்டுக்கு வரும் போது, இவை பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X