பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
மரக்காணம்-கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையம் மரக்காணம் பழைய போலீஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வருவதைத் தடுக்க பட்டானுார், பெரியமுதலியார் சாவடி, அனிச்சங்குப்பம், கிளியனுார் ஆகிய பகுதிகளில்

மரக்காணம்-கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையம் மரக்காணம் பழைய போலீஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வருவதைத் தடுக்க பட்டானுார், பெரியமுதலியார் சாவடி, அனிச்சங்குப்பம், கிளியனுார் ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் உள்ளன.சில மாதங்களாக இந்த வழியாக மது கடத்தல் அதிகரித்து வந்ததால், சில தினங்களுக்கு முன் எஸ்.பி., ஸ்ரீநாதா மது விலக்கு சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீசாரை தினமும் மூன்று ஷிப்ட் சுழற்சி முறையில் பணி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில், நேற்று மரக்காணத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களை சரிபார்த்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வருபவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X