இந்தியாவில் ஜனநாயகம் அமித் ஷா பெருமிதம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி :''சுதந்திரம் பெறுவதற்கு பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் ஜனநாயகம் இருந்தது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.டில்லியில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 51வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகம் நம் நாட்டின் இயல்பு. 1950-ம்
இந்தியா, ஜனநாயகம் , அமித் ஷா பெருமிதம்

புதுடில்லி :''சுதந்திரம் பெறுவதற்கு பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் ஜனநாயகம் இருந்தது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டில்லியில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 51வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகம் நம் நாட்டின் இயல்பு. 1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் தான், ஜனநாயகம் வந்தது என்று யாராவது சொன்னால், அது தவறு.ஜனநாயகம் நம் நாட்டின் இயல்பு. சுதந்திரத்துக்கு பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தது. கிராமங்களில் 'பஞ்ச பரமேஸ்வர்' அமைப்பு இருந்தது.


latest tamil news



ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் துவாரகையில் யாதவர்களின் குடியரசு இருந்தது. பீஹாரிலும் குடியரசுகள் இருந்துள்ளன. காவல் துறையின் பிம்பத்தை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன. எதிர்ப்பு பிரசாரங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன.காவல் துறை தொடர்பாக நல்ல சம்பவங்கள் நடந்தால், அதைப் பற்றி பேசுவதில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. முழு அரசாங்க அமைப்பிலும் மிகவும் கடினமான வேலை, போலீஸ் பணி மட்டுமே.இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X