கலப்பு திருமணம் செய்த பெண்கள் ஒதுக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பு திருமணம் செய்த பெண்கள் ஒதுக்கி வைப்பு

Added : செப் 04, 2021
Share
திருச்சி: கலப்பு திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக இளம் பெண்கள் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள டி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி, 28, காவியா, 26, அஞ்சலி தேவி, 24, மேனகா, 25 ஆகிய நான்கு இளம்பெண்கள் நேற்று காலை திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில்

திருச்சி: கலப்பு திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக இளம் பெண்கள் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள டி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி, 28, காவியா, 26, அஞ்சலி தேவி, 24, மேனகா, 25 ஆகிய நான்கு இளம்பெண்கள் நேற்று காலை திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டோம். இதனால் ஊரில் உள்ள எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

எங்களுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் எங்களை ஊருக்குள் சேர்க்காமல், அரசின் உதவிகள், அத்தியாவசிய தேவைகள் கொடுக்காமல் மறுத்து வருகின்றனர்.கோவில் திருவிழாக்களில் பங்கேற்க விடுவதில்லை. எங்களிடம் வரி வசூலிப்பது இல்லை. கிராமத்தில் யாரும் எங்களுடன் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் எங்களை தொடர்ந்து, ஊரை விட்டு செல்லும்படி மிரட்டி வருகின்றனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். நாங்கள் கிராமத்தில் இயல்பாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் திருச்சி எஸ்.பி., அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக, இளம்பெண்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X