பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி

Added : செப் 04, 2021
Share
Advertisement
மயிலம்-'உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.உள்ளாட்சித் தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'ஆட்சிக்கு வந்த 4 மாதத்திற்குள் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை முடக்க

மயிலம்-'உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.உள்ளாட்சித் தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'ஆட்சிக்கு வந்த 4 மாதத்திற்குள் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க., தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார்.எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படுமா என சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு சரியான பதில் இல்லை. அப்படியென்றால் இந்த திட்டத்தையும் தி.மு.க., முடக்க திட்டமிட்டுள்ளது.வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி' என்றார்.ஒன்றிய செயலாளர் சேகரன், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாராம், முத்துகுமார், கந்தன், தயாளன், முன்னாள் சேர்மன் தசரதன் தொழில்நுட்ப பிரிவு ராஜா, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X