பொது செய்தி

தமிழ்நாடு

வனங்களில் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
சட்டசபையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதிலுரை: வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் நலனுக்காக, குடிநீர், வீடு, மின்சாரம், பள்ளி, திறன்மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. யானைகள், எருமைகள், பன்றிகள், சிறுத்தை, கரடி, புலிகள் உள்ளிட்டடவற்றால், மனித - வன உயிரின மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி

சட்டசபையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதிலுரை: வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் நலனுக்காக, குடிநீர், வீடு, மின்சாரம், பள்ளி, திறன்மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. யானைகள், எருமைகள், பன்றிகள், சிறுத்தை, கரடி, புலிகள் உள்ளிட்டடவற்றால், மனித - வன உயிரின மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காட்டு தீயின் தீவிரத்தை கட்டுப்படுத்த தீக்கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வனங்களில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க, தேசிய தொலையுணர்வு மையம் மற்றும் இந்திய வன அளவை நிறுவனத்திடம் இருந்து, தகவல்கள் பெற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மனித - வன உயிரின மோதல்களை தடுக்க, கண்காணிப்பு கோபுரங்கள் மட்டுமின்றி, ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஊருக்குள் வரும் வன உயிரினங்களை, வனப்பகுதிகளுக்குள் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப, வேட்டை தடுப்பு காவலர்கள், தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப் படுகின்றனர்.

காப்பு காடுகள், சரணாலங்கள், புலிகள் காப்பகங்களில் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த, 3.30 கோடி ரூபாய் மதிப்பில், வனக்குளங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அலையாத்தி காடுகள் பாதுகாப்பு திட்டம், 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் முதல் துாத்துக்குடி வரையிலான கடல் பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் மற்றும், 21 தீவுகளுக்கான பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களும், விவசாயிகளும், காட்டு பன்றிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அவசியப்படும் நேரத்தில் அரசு விதிகளுக்கு உட்பட்டு, காட்டுப்பன்றியை வனத்துறை வாயிலாக சுட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மான், கரடி, மயில்கள் போன்றவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், புதிய வழிமுறைகளை கொண்டு கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X