விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 47 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 47 பேருக்கு தொற்று

Added : செப் 04, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 351 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 310 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு

விழுப்புரம்-விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 351 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 310 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 912 ஆக உயர்ந்தது. இதுவரை 44 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 30 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 20 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மூன்று பேர் வெளிமாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 191 ஆக உயர்ந்தது. இதில், 29 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளனர். 292 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 201 ஆக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X