'பார்ட்டி' கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பெங்களூரு:சமூக வலைதளம் வாயிலாக பழக்கமான பெண்ணை, பெங்களூரு வரவழைத்து வீட்டில் 'பார்ட்டி' நடத்தி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நைஜீரியாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானஸ்வாடியில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த உபாகா, 36, என்பவருக்கு சமூக வலை தளம் வாயிலாக பெங்களூரில் பணியாற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 20 வயது

பெங்களூரு:சமூக வலைதளம் வாயிலாக பழக்கமான பெண்ணை, பெங்களூரு வரவழைத்து வீட்டில் 'பார்ட்டி' நடத்தி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நைஜீரியாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானஸ்வாடியில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த உபாகா, 36, என்பவருக்கு சமூக வலை தளம் வாயிலாக பெங்களூரில் பணியாற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 20 வயது மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் அறிமுகமானார்.

தன்னுடன் நண்பராக அழைப்பு விடுத்தார். பல முறை வேண்டுகோளுக்கு பின், அப்பெண் இவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். இவர்கள் அவ்வப்போது பேசி வந்தனர்.கடந்த ஆகஸ்ட் 29ல் தன் வீட்டுக்கு வரும்படி அப்பெண்ணுக்கு உபாகா அழைப்பு விடுத்தார். அவரும் வந்தார். அப்போது உபாகாவின் நண்பர் டோனி உடனிருந்தார்.தன்னையும் நண்பராக ஏற்றுக் கொள்ளும்படி டோனி, அப்பெண்ணிடம் கேட்டு கொண்டார். நீண்ட பேச்சுக்கு பின் அவர் சம்மதித்தார். பின் அன்றிரவு மூவரும் மது பார்ட்டி நடத்தினர். மது அதிகமாக குடித்ததால் அப்பெண் மயக்கமடைந்தார்.

காலையில் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் டோனி ஆடையின்றி படுத்திருப்பதையும், தான் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் செய்தார்.இதையடுத்து உபாகா, டோனி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X