சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

Added : செப் 04, 2021
Share
Advertisement
திண்டிவனம்-குடிபோதையில் தீ வைத்துக் கொண்ட கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் அடுத்த நெய்குப்பி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 35; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 30ம் தேதி இரவு குடித்து விட்டு, போதையில், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து

திண்டிவனம்-குடிபோதையில் தீ வைத்துக் கொண்ட கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் அடுத்த நெய்குப்பி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 35; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 30ம் தேதி இரவு குடித்து விட்டு, போதையில், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்திச் சென்றனர்.அன்று இரவு வீட்டிற்குள் பிரான்சிஸ் மீண்டும் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.பலத்த காயமடைந்த அவர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X