தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு

Added : செப் 04, 2021
Share
சட்டசபையில் நடைபெற்ற விவாதம்காங்., - விஜயதாரணி: கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்கள் வாழக்கூடிய பகுதிகளை, சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, மக்களை அப்புறப்படுத்த முயல்கின்றனர். காடுகளை ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. காடுகளுக்கு வெளியில் உள்ள மக்கள், ஒவ்வொன்றுக்கும் அனுமதி பெற வேண்டும் என்பது சரியல்ல. எனவே, இந்த திட்டத்தை, முழுமையாக கைவிட வேண்டும். காணி இன

சட்டசபையில் நடைபெற்ற விவாதம்

காங்., - விஜயதாரணி: கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்கள் வாழக்கூடிய பகுதிகளை, சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, மக்களை அப்புறப்படுத்த முயல்கின்றனர். காடுகளை ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. காடுகளுக்கு வெளியில் உள்ள மக்கள், ஒவ்வொன்றுக்கும் அனுமதி பெற வேண்டும் என்பது சரியல்ல. எனவே, இந்த திட்டத்தை, முழுமையாக கைவிட வேண்டும்.
காணி இன பழங்குடியின மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் நிலங்களுக்கு செல்வதற்கு கூட, வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால், அவர்களுக்கும், அரசுக்கும் இடையே மோதல் உருவாகிறது; இதை தவிர்க்க வேண்டும்.காடுகள், 33 சதவீதம் உருவாக்கப்பட வேண்டும் எனற விதி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பொருந்தாது. தனியார் வனப்பாதுகாப்பு சட்டம், கேரளாவில் கைவிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கைவிட வேண்டும்.

ஏழை மக்கள், 'அல்பீசியா' என்ற மரங்களை பயிரிடுகின்றனர். அதை பர்னிச்சர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த மரம் தீக்குச்சி, ஐஸ்கிரீம் குச்சி போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மரம் போக்குவரத்து விதிகளில் இருந்து, அல்பீசியா மரங்களை நீக்க வேண்டும்.அரசு ரப்பர் கழகத்தில் தொழிலாளர்களுக்கு, 80 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.

அமைச்சர் ராமச்சந்திரன்: காணி இன பழங்குடியின மக்கள் குறித்து மனு அளித்துள்ளார். அவர்கள் நிலங்களை அளக்கிறோம். அவர்கள் எவ்வளவு நிலம் வைத்திருந்தனரோ, அந்த நிலத்திற்கு பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மரம் போக்குவரத்து விதிகளில் இருந்து, அல்பீசியா மரத்திற்கு விலக்கு அளிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கு உள்ளே உள்ள நிலத்தை விற்க அனுமதி தேவையில்லை. அதற்கு மேல் உள்ள நிலங்களை விற்க, கலெக்டரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.கலெக்டர் தலைமையிலான குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி முடிவு செய்யும். இக்கூட்டத்தை, மாதம் ஒருமுறை கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் சம்பளம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X