அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறந்த ஆன்மிக சுற்றுலா விருது தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:''மத்திய அரசால் சிறந்த ஆன்மிக சுற்றுலா விருது, தமிழக சுற்றுலா துறைக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். தமிழக சட்டசபையில், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: சுற்றுலா பயணியர் ஆண்டு முழுதும் வரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பனிமலை, எரிமலை தவிர, அனைத்து இயற்கை வளங்களும், பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய

சென்னை:''மத்திய அரசால் சிறந்த ஆன்மிக சுற்றுலா விருது, தமிழக சுற்றுலா துறைக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

தமிழக சட்டசபையில், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: சுற்றுலா பயணியர் ஆண்டு முழுதும் வரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பனிமலை, எரிமலை தவிர, அனைத்து இயற்கை வளங்களும், பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய சின்னங்களும் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

கொரோனா காரணமாக, சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் முயற்சியால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதனால், சுற்றுலா பயணியருக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலா தலங்களை அமைக்கும் போது, உலக வெப்பமயமாதல் கருதி பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.

அனைத்து மாநிலங்களில் நடக்கும் பொருட்காட்சிகள், பாரம்பரிய விழாக்களில் பங்கேற்று, தமிழக சுற்று லாவை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.வேலைவாய்ப்பை உருவாக்குவது, வருவாயை ஈட்டுவது, அன்னிய செலாவணி அதிகரிப்பதில், தமிழக சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சுவையான உணவு, உயரிய விருந்தோம்பல், தரமான தங்கும் விடுதிகள், சுற்றுலா துறையால் வழங்கப்படுகின்றன.
தமிழக சுற்றுலா துறை, தற்போது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நவக்கிரக சுற்றுலா, சக்தி சுற்றுலா, அறுபடை வீடு சுற்றுலா, திவ்யதேச சுற்றுலா ஆகியவை, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மத்திய அரசால் சிறந்த ஆன்மிக சுற்றுலா விருது, தமிழக சுற்றுலா துறைக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பொழுதுபோக்க, இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இளைஞர்களுக்கு சாகச சுற்றுலா மீது அதிக ஆர்வம் உள்ளது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, சுற்றுலா பன்முக தன்மை கொண்டதாக உள்ளது. இதை சவாலாக எடுத்து, பல்வேறு சுற்றுலாக்களை அறிமுகம் செய்து, நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் வளர்ச்சி அடையும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X